Archive

Archive for July, 2012

http://www.spoon-feed.com/bhaja-govindam-lyrics-in-tamil-and-bhaja-govindham-explanation-given-in-tamil-by-anna/

பஜ கோவிந்தம்!!!

த்வாதசமஞ்சரிகா

– ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார்

பஜ கோவின்தம் பஜ கோவின்தம்
கோவின்தம் பஜ மூடமதே |
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே

னஹி னஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே || 1 ||

1. விவேகமற்றவானே ! கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு,

மரண காலம் நெருங்கிய பொழுது ‘டுக்ருஞ் கரனே’ போன்ற வியாகரண தாது பாடம் உன்னை ஒரு காலும் காப்பற்றவே காப்பாற்றாது.

மூட ஜஹீஹி தனாகமத்றுஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்றுஷ்ணாம் |
யல்லபஸே னிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம் || 2 ||

2. விவேகமற்றவானே ! பொருள் வர வேண்டும் என்ற பேராசையை ஒழித்துவிடு.

மனதில் பேராசையில்லாத நல்ல புத்தியை நாடு.
உனக்கு உரித்தான கருமத்தால் எந்தப் பொருளை அடைகிறாயோ அதனால் சிதத்தை இன்புறச் செய்வாயாக.

னாரீ ஸ்தனபர னாபீதேஶம்
த்றுஷ்ட்வா மா கா மோஹாவேஶம் |
ஏதன்மாம்ஸ வஸாதி விகாரம்

மனஸி விசின்தயா வாரம் வாரம் || 3 ||

3. பெண்களின் நகில்களையும் நாபிப் பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்கி ஆவேசத்தையடையாதே,

இவை மாமிசம் கொழுப்பு ஆகியவற்றின் வேறுபட்ட உருவங்களே என்று அடிக்கடி மனதில் எண்ணிக்கொள்.

னளினீ தளகத ஜலமதி தரளம்
தத்வஜ்ஜீவித மதிஶய சபலம் |
வித்தி வ்யாத்யபிமான க்ரஸ்தம்
லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் || 4 ||

4. தாமரை இலையின் மேலுள்ள நீர்த்திவலை மிகவும் சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் அதிசயிக்கத் தக்க வகையில் சஞ்சலமானது.

உலகம் முழுவதும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதேன்றும்,
துன்பத்தால் ஆகிரமிக்கப்பட்டதேன்றும் உணர்வாயாக.

யாவத்-வித்தோபார்ஜன ஸக்தஃ
தாவன்-னிஜபரிவாரோ ரக்தஃ |
பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே

வார்தாம் கோ‌உபி ன ப்றுச்சதி கேஹே || 5 ||

5. பொருள் ஏறுவதில் நாட்டம் உள்ளவனாகருக்கும் வரை தான் உன்னை அண்டியவர்கள் பற்றுடையவர்களாயிருப்பர்.

அதன் பின் மூப்படைந்த உடலில் வாழ்ந்தால் வீட்டில் எவரும் ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டார்கள்.

யாவத்-பவனோ னிவஸதி தேஹே
தாவத்-ப்றுச்சதி குஶலம் கேஹே |
கதவதி வாயௌ தேஹாபாயே

பார்யா பிப்யதி தஸ்மின் காயே || 6 ||

6. எதுவரை மூச்சுக்காற்று உடலில் உளதோ அதுவரை வீட்டில் உன்னுடைய ஷேமத்தை விசாரிப்பார்கள்.

அந்த மூச்சுக்காற்று பொய் உடல் சாய்ந்துவிட்டால் மனைவியும் அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள்.

அர்த்த-மனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: சூகலேய்ச: சத்யம்|

புத்ராதபி தனபாஜாம் பீதி:
சர்வத்ரஆயிஷா விஹித ரீதி: || 7 ||

7. பொருளை பொருளாகக் கருதாமல் துன்பம் என்று எப்பொழுதும் எண்ணுவாயாக.
அதில் சிறிதளவும் இன்பம் இல்லை என்பது உண்மை.

பொருளைச் சீமிப்பவர்களுக்குப் பிள்ளைகளிடமிருந்தும்கூட பயம் ஏற்படுகின்றது.
இதுவே எங்கும் இயல்பாக உளது.

பால ஸ்தாவத் க்ரீடாஸக்தஃ
தருண ஸ்தாவத் தருணீஸக்தஃ |
வ்றுத்த ஸ்தாவத்-சின்தாமக்னஃ

பரமே ப்ரஹ்மணி கோ‌உபி ன லக்னஃ || 8 ||

8. குழந்தையானால் அப்பொழுது விளையாட்டில் பற்றுள்ளவனாகின்றான்;

வாலிபனானால் அப்பொழுது பருவமங்கையரிடம் பற்றுள்ளவனாகின்றான்;

கிழவனானால் அப்பொழுது கவலைச் சிந்தனைகளில் பற்றுள்ளவனாகின்றான்;
பரப்ரம்மத்தில் பற்றுள்ளவர் எவரும் இல்லை.

கா தே கான்தா கஸ்தே புத்ரஃ
ஸம்ஸாரோ‌உயமதீவ விசித்ரஃ |
கஸ்ய த்வம் வா குத ஆயாதஃ

தத்வம் சின்தய ததிஹ ப்ராதஃ || 9 ||

9. உன் மனைவி யார் ? உன் மகன் யார் ?

இந்த சம்சாரம் மிகவும் விசித்திரமானது.

நீதான் யாருடையவன் ? எங்கிருந்து வந்தாய் ?

அந்த தத்துவத்தை இங்கு எண்ணிப்பார், தம்பீ !

ஸத்ஸங்கத்வே னிஸ்ஸங்கத்வம்
னிஸ்ஸங்கத்வே னிர்மோஹத்வம் |
னிர்மோஹத்வே னிஶ்சலதத்த்வம்
னிஶ்சலதத்த்வே ஜீவன்முக்திஃ || 10 ||

10. நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும்.

பற்றின்மையால் மதிமயக்கம் நீங்கும்.

மதிமயக்கம் நீங்கினால் மாறுபடாத உண்மை விளங்கும்.

மாறுபடாத உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி.

வயஸி கதே கஃ காமவிகாரஃ
ஶுஷ்கே னீரே கஃ காஸாரஃ |
க்ஷீணே வித்தே கஃ பரிவாரஃ

ஜ்ஞாதே தத்த்வே கஃ ஸம்ஸாரஃ || 11 ||

11. வயது கடந்தபின் காம விகாரம் ஏது ?

தண்ணீர் வற்றிய பின் குளம் ஏது ?

செல்வம் அழிந்த பின் சுற்றம் ஏது ?

தத்துவத்தை அறிந்த பின் சம்சாரம் ஏது ?

மா குரு தனஜன யௌவன கர்வம்
ஹரதி னிமேஷாத்-காலஃ ஸர்வம் |
மாயாமயமிதம்-அகிலம் ஹித்வா

ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிஶ விதித்வா || 12 ||

12. செல்வத்தாலும் சுற்றத்தாலும் இளமையாலும் கருவம் கொள்ளாதே.

காலன் அனைத்தையும் ஒரு நிமிஷத்தில் கொண்டுபோய் விடுவான்.

மாய மயமான இதையெல்லாம் விடு பிரம்ம பதத்தை அறிந்து அதில் புகுவாயாக.

தின யாமின்யௌ ஸாயம் ப்ராதஃ
ஶிஶிர வஸன்தௌ புனராயாதஃ |
காலஃ க்ரீடதி கச்சத்யாயுஃ

ததபி ன முஞ்சத்யாஶாவாயுஃ || 13 ||

13. பகலும் இரவும், மாலையும் காலையும்,

குளிர்காலமும் வசந்த காலமும், மீண்டும் மீண்டும் வருகின்றன.

காலம் விளையாடுகிறது. ஆயுள் செல்லுகின்றது.

ஏன்றாலும் ஆசாபாசம் விடுவதில்லை.

த்வாதஶ மம்ஜரிகாபிர ஶேஷஃ
கதிதோ வையா கரணஸ்யைஷஃ |
உபதேஶோ பூத்-வித்யா னிபுணைஃ
ஶ்ரீமச்சம்கர பகவச்சரணைஃ ||

பூங்கோதுப் போன்ற இப்பநிரெண்டு சுலோகங்களால் ஒரு வியாகரண பண்டிதருக்குப் பரிபூரணமான உபதேசம் வித்யைகளில் பூரண அறிவு பெற்ற ஸ்ரீ சங்கர பிகாவத்பாதரால் கூரியருளப்பட்டது.

இதி ஸ்ரீ சங்கராச்சர்யோபதிஷ்ட – த்வாதசமஞ்சரிகா – ஸ்தோத்ரம் சமாப்தம்.

இங்ஙனம் ஸ்ரீ சங்கராச்சாரியார் உபதேசித்த த்வாதசமஞ்சரிகா ஸ்தோத்ரம்

முற்றும்.

COURTESY : http://www.spoon-feed.com/bhaja-govindam-lyrics-in-tamil-and-bhaja-govindham-explanation-given-in-tamil-by-anna/

Advertisements
Categories: Other Blogs
%d bloggers like this: